< Back
மாநில செய்திகள்
விராட்சிலையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விராட்சிலையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
24 Oct 2022 12:00 AM IST

விராட்சிலையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

திருமயம் தாலுகா விராட்சிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மஞ்சுவிரட்டு நடைபெறும் என சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் பாரதி கூறுகையில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31-ந் தேதி வரை தான் மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கு பின் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை. எனவே மஞ்சுவிரட்டு தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்