< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
|7 Sept 2023 10:33 PM IST
6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
* சென்னை மாவட்ட கலெக்டராக ராஷ்மி சித்தார்த் ஜகடோ நியமனம்
* நீலகிரி மாவட்ட கலெக்டராக அருணா நியமனம்
* வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பக ஆணையராக நந்தகோபால் நியமனம்
* நில நிர்வாகத்துறை இணை ஆணையராக அம்ரித் நியமனம்
* தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக ஹனீஸ் சாப்ரா நியமனம்
* தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமனம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.