< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
|18 Nov 2023 7:08 PM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக நாடு திரும்பவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.