< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - மின் வாரியம்
|1 Jun 2024 2:35 PM IST
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மின் தேவை அதிகரித்து வருவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் சென்னையின் மின் தேவை 4769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் பழுது ஏற்படுவதால் சில இடங்களில் மின் தடை ஏற்படுவதாகவும், மின் தடை ஏற்படும் போது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மின் தடை புகார்களை சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.