< Back
மாநில செய்திகள்
மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

"மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
16 May 2023 11:26 AM IST

மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாரயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்கானிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 15,853 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்