விருதுநகர்
தளவாய்புரம் உழவர்சந்தையை மேம்படுத்த நடவடிக்கை
|தளவாய்புரம் உழவர்சந்தையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சியில் உள்ள உழவர் சந்தையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது உழவர் சந்தை. தளவாய்புரத்தில் உள்ள உழவர்சந்தையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ், தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, விற்பனைத்துறை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவிப்பொறியாளர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், நிர்வாகிகள், விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.