< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
50 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்
|25 Aug 2023 10:45 AM IST
50 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள முல்லூரில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது.
மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 53 இடங்களில் குப்பைக்கிடங்குகள் பயோமைனிங் மூலம் அகற்றப்பட்டு உயிர்நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.