< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க அதிரடி நடவடிக்கை
|5 Jan 2023 3:13 PM IST
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க, 20 கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க, 20 கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியப்படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், இதை தவிர்க்க தொடர்ச்சியாக போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக, பெரம்பூர்-எழும்பூர், போரூர்-குன்றத்தூர் உள்ளிட்ட 12 வழித்தடங்களில் 20 கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.