< Back
மாநில செய்திகள்
தமிழக போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி முடிவு... 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி முடிவு... 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Feb 2024 8:42 PM IST

3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.

சென்னை,

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டிருந்தது. இந்த திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த மாதம் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணித்தவர்களில் 3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.

அந்த வகையில் இசக்கி முருகன் (பயணசீட்டு எண்: T50959052) , சீதா (பயணசீட்டு எண்: T51210787), இம்தியாஸ் ஆரிப் (பயணசீட்டு எண்: T51655633) ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விரைவில் ரூ.10,000 வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்