< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.... தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
12 July 2023 11:31 PM IST

தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி வீடியோ மூலமாக முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அமர்நாத்திற்கு யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரீகர்கள் பனிமலை நிலசரிவில் சிக்கி தவிக்கும் நிலையில் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி வீடியோ மூலமாக முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 21 நபர்கள் ஜூலை 4 ஆம் தேதி காஷ்மீர் அமர்நாத் கோயில் லிங்கம் புனித யாத்திரைக்கு சென்னையில் இருந்து சென்றுள்ளனர். பின்னர் அமர்நாத் கோயிலின் பனி மலையில் உள்ள லிங்கத்தை வணங்கிவிட்டு நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.

பிறகு அங்கிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட போது பனி நிலசரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பயணத்தை தவிர்க்குமாறும் சி.ஆர் பி.எப் வீரர்கள்அவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த நான்கு நாட்களாக அத்திவாசிய தேவைகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாககவும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாத்ரீகர்கள் முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வீடியோ வாயிலாக கோரிக்கையை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்