< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினத்தந்தி
|
24 May 2022 12:12 AM IST

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, பாலங்கள், சமுதாயக்கூடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், மேலும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுக்கள் அனைத்தையும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினார். தொடர்ந்து அந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்