< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கடையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
|29 Aug 2023 1:15 AM IST
கடையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி புகார் அளித்தார்.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த குளிர்பான கடை வியாபாரி இன்பராஜ் (வயது 49). இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் நாகல்நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கடந்த 21-ந்தேதி நான் விலைக்கு வாங்கிவிட்டேன். இந்த நிலையில் எனது கடையின் பூட்டை உடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை தட்டிக்கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கடையை இடித்து தரைமட்டமாக்கிவிடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.