< Back
மாநில செய்திகள்
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
20 Oct 2023 1:40 AM IST

விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை கடைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, போலீஸ் துறை, தொழிலக பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து சிறப்பு ஆய்வுக்குழுக்கள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், சில்லரை விற்பனை கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்