< Back
மாநில செய்திகள்
அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
மாநில செய்திகள்

"அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை" - அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை

தினத்தந்தி
|
10 Sept 2022 6:36 PM IST

அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை சார்பில் நேரடியாக பார்வையிடப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சமூக பாதுகாப்புத்துறை வலைதளத்தில் குழந்தை பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை சார்பில் நேரடியாக பார்வையிடப்பட்டு வருகிறது. அங்கு ஏதேனும் வசதிகளில் குறைபாடு இருந்தால், அதனை சரிசெய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சம்பந்தப்பட்ட விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்