< Back
மாநில செய்திகள்
கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை
கரூர்
மாநில செய்திகள்

கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
26 Oct 2023 11:50 PM IST

கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருந்தகங்களில் எச், எச்1, எக்ஸ் மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திடுமாறு மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், குழந்தை நேய காவல் அலுவலர்கள் கண்காணிப்பு கேமரா பதிவினை எந்த நேரங்களிலும் பார்வையிட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் உடனடியாக பொருத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்