கரூர்
"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
|"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் அதாவது, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் 94981 63518, ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் 94981 78674, குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் 94981 54236, துணை ஆணையர் (மாநில வரிகள்) 94451 95176, கரூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000453, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் 9445000454 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.