< Back
மாநில செய்திகள்
தமிழக காவல்துறையின் செயல் பாராட்டுதலுக்குரியது - திருமாவளவன்
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் செயல் பாராட்டுதலுக்குரியது - திருமாவளவன்

தினத்தந்தி
|
27 Oct 2022 12:30 PM IST

கோவை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது. கோவையில் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழக காவல்துறையின் செயல் பாராட்டுதலுக்குரியது. கடையடைப்பின் மூலம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக்கூடாது. இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை ஏற்கவில்லை, ஊக்கப்படுத்தவில்லை. பன்னாட்டு இயக்கங்களுடன் தொடர்பு உள்ள இதுபோன்ற வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியாக இருக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்