< Back
மாநில செய்திகள்
மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்
வேலூர்
மாநில செய்திகள்

மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்

தினத்தந்தி
|
3 Jun 2022 11:15 PM IST

மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வீரர்களுக்கு தீயணைப்புத் துறை டி.ஜி.பி. பிராஜ்கிஷோர்ரவி அறிவுரை வழங்கினார்.

வேலூர்

மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வீரர்களுக்கு தீயணைப்புத் துறை டி.ஜி.பி. பிராஜ்கிஷோர்ரவி அறிவுரை வழங்கினார்.

டி.ஜி.பி. ஆய்வு

வேலூரில் உள்ள தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் அலுவலகம், வேலூர் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் தீயணைப்புத் துறை டி.ஜி.பி. பிராஜ்கிஷோர்ரவி ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை திறந்து வைத்தார். அந்த கண்காட்சியில் தீயணைப்புத் துறை வீரர்கள் பணியின் போது மேற்கொண்ட வீர, தீர மீட்பு பணிகள் குறித்த படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்களை பார்வையிட்டார். அப்போது தீயணைப்பு வீரர்களிடம் மீட்பு பணியின் போது கவனமாக செயல்பட வேண்டும் என்றும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

தீயணைப்பு வாகனம்

வேலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் அவரிடம், வேலூர் மாநகரம் வளர்ந்து வருகிறது. பல அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள் பல உருவாகி வருகின்றன. எனவே கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளின் போது தீயை அணைக்க பயன்படுத்தும் வகையில் உயர் நீட்டிப்பு லேடர் வசதி கொண்ட தீயணைப்பு வாகனம் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வட மேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார், மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலர்கள், உதவி மாவட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி. ஏற்றுக் கொண்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்