விருதுநகர்
தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை தேவை
|பாதிப்புகளை கடந்து பட்டாசு உற்பத்தி நடந்து இருந்தாலும் பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புகளை கடந்து பட்டாசு உற்பத்தி நடந்து இருந்தாலும் பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு தொழில்
நாடு முழுவதுமான பட்டாசு தேவைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியே முக்கியமாக விளங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டு தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்கிறது. தொடக்க காலத்தில் சீனப் பட்டாசு இறக்குமதியால் சிவகாசி பட்டாசு தொழில் பாதிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது விதிமுறை, பசுமை பட்டாசு, பட்டாசு வெடிப்பதற்கு தடை போன்ற பிரச்சினைகளால் பட்டாசு தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டு விட்டது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் முதல் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்டாசு தொழில் நலிவடைந்து விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
பாதுகாக்க நடவடிக்கை
ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சியினரும், அரசு பொறுப்பில் இருப்பவர்களும் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புக்கள் வெளியிடும் நிலையை இருக்கிறதே தவிர உண்மை நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுத்த பாடில்லை.
இதனால் தற்போது தீபாவளியையொட்டியும் பட்டாசு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதிலும் பிரச்சினைகளை கடந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியமும், அத்தியாவசியமும் ஏற்பட்டது.
அரசுகளின் கடமை
எனவே மத்திய, மாநில அரசுகள் இனியாவது பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பட்டாசு தொழில் பிரச்சினை பற்றி முறையாக வாதம் செய்து பட்டாசு தொழிலுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை நீதிமன்றங்களை அறிவிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் மாதங்களில் எடுக்கப்பட வேண்டியது அவசியமும் ஆகும். பட்டாசு உற்பத்தியாளர்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளனர்.