திருச்சி
லியோ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
|லியோ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் அதாவது, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வகையில் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வருமாறு:-
திருச்சி வருவாய் கோட்டாட்சியர்- 9445000455, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்- 9445461797, லால்குடி வருவாய் கோட்டாட்சியர்- 9445000456, முசிறி வருவாய் கோட்டாட்சியர்- 9445000457. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.