< Back
மாநில செய்திகள்
தடைசெய்யப்பட்ட எலி மருந்தை விற்றால் நடவடிக்கை
திருவாரூர்
மாநில செய்திகள்

தடைசெய்யப்பட்ட எலி மருந்தை விற்றால் நடவடிக்கை

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எலி மருந்துக்கு தடை

வேளாண்-உழவர் நலத்துறை சார்பில் தீங்கு விளைவிக்கும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேடால் என்ற எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த எலி மருந்தை விவசாயிகள். பொதுமக்கள் எதற்காகவும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். ரேடால் மருந்து விற்பனை செய்யக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

நடவடிக்கை

இந்த ஆய்வின்போது ரேடால் மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை பூச்சி மருந்து ஆய்வாளர்களுக்கு திருவாரூர்-7397753318, நன்னிலம்-9080175515, கொரடாச்சேரி-8610452552, நீடாமங்கலம்-9442475669, குடவாசல்-9443784944, வலங்கைமான்-9952415289, மன்னார்குடி-9787327535, கோட்டூர்-9443717230, திருத்துறைப்பூண்டி-9443492013, முத்துப்பேட்டை-9791346450 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்