< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பொய் தகவல் அளித்த மகன் மீது நடவடிக்கை
|1 April 2023 1:20 AM IST
பொய் தகவல் அளித்த மகன் மீது நடவடிக்கை
கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் சாரங்கபாணி பேட்டை கிராமத்தை சேர்ந்த காவேரி அம்மாள் (வயது 85) நேற்று கும்பகோணம் கோட்டாட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எனது 2-வது மகனுக்கும் சொத்து பிரிப்பதில் பிரச்சினை உள்ளது. இதனால் அவர் நான் உயிரோடு இருக்கும் போதே இறந்துவிட்டதாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே பொய்யான தகவல் அளித்த தனது 2-வது மகன் தண்டாயுதபாணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த பத்திர எழுத்தர் பசுபதி ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.