< Back
மாநில செய்திகள்
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் - தலைமை குற்றவியல் வக்கீல்
மாநில செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் - தலைமை குற்றவியல் வக்கீல்

தினத்தந்தி
|
13 Aug 2022 8:23 PM IST

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் என தலைமை குற்றவியல் வக்கீல் கூறியுள்ளார்.

சென்னை,

போதை பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளில் ஆஜராகும் அரசு தரப்பு வக்கீல்களுக்கு சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறியதாவது,

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள் ஜாமீன், முன்ஜாமீன் கிடைக்கக்கூடாது. அந்த நபர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதா? என்ற விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் விசாரித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாரை நிர்பந்திக்க வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை அடைந்தால், உடனடியாக மேல்முறையீடு செய்ய நடவடக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற வாய்தாக்களை தவிர்க்க வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்து. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு மட்டுமல்ல, வழக்கை சரிவர நடத்தவில்லையென்றால் அரசு வக்கீல்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும்.

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்