< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரி வசூல்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரி வசூல்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்

தினத்தந்தி
|
31 Jan 2023 6:31 PM IST

பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாதகடைகளுக்கு நோட்டீஸ்

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நில மனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நடவடிக்கை

இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

ரூ.10 லட்சம் வசூல்

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்