< Back
மாநில செய்திகள்
வைகை ஆற்றின் குறுக்கேரூ.7 கோடியில் பாலம் கட்டும் பணி
தேனி
மாநில செய்திகள்

வைகை ஆற்றின் குறுக்கேரூ.7 கோடியில் பாலம் கட்டும் பணி

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

வைகை ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் பாலம் கட்டும் பணி தொடங்கியது.

வருசநாடு அருகே செல்வராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வைகை ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் செல்வராஜபுரம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு விடும். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். விவசாயிகளும் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். இதனால் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து செல்வராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்ட தமிழக அரசு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக புதிய பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த பாலம் ஒரு ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்