தேனி
மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|மாவட்டம் முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாடார் உறவின்முறை
தேனி மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில், உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் விஜயகுமார் தேசிய கொடி ஏற்றினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் துணை முதல்வர் மாதவன் நன்றி கூறினார்.
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜெயராம் நாடார் தேசிய கொடி ஏற்றினார். உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் நடந்த விழாவுக்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினார். கல்லூரி செயலாளர் குணசேகரன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார்.
பள்ளிகள்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், உறவின்முறை உபதலைவர் கணேஷ் தேசிய கொடி ஏற்றினார். விழாவுக்கு உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபக்கணேஷ், பள்ளி முதல்வர் பூரணசெல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தர்மராஜன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி வாழ்த்தி பேசினார். நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கண்ணாயிரம் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் விஜய், கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சாம்பவி, துணை முதல்வர் முத்துசெல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜவஹர் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி முதல்வர் ஜெகநாதன் வரவேற்றார்.
கம்மவார் சங்க கல்லூரி
தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில், கல்லூரி செயலாளர் தாமோதரன் தேசியகொடி ஏற்றினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன், கல்லூரி பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் சீனிவாசன் தேசிய கொடி ஏற்றினார்.
தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், பள்ளி தாளாளர் நாராயணபிரபு தேசிய கொடி ஏற்றினார். தொழில்அதிபர் லால்பகதூர் சாஸ்திரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.