< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!
|23 March 2023 11:40 AM IST
ஆசிட் வீசியபோது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றபோது, அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
கோவை,
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவிதா என்ற பெண் மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பெண் மீது ஆசிட் வீசியபோது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள், ஆசிட் வீசிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.