< Back
மாநில செய்திகள்
பள்ளியில் மாணவன் மீது பட்ட ஆசிட்... மூச்சு விடுவதில் சிக்கல் - பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

பள்ளியில் மாணவன் மீது பட்ட ஆசிட்... மூச்சு விடுவதில் சிக்கல் - பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
18 Jun 2023 8:39 PM IST

சிதம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அமிலத்தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அமிலத்தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 12 வகுப்பு பயின்று வருபவர் அப்துல் ஹமீது. சில நாட்களுக்கு முன்பு, பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தின் மேஜையில் சிந்தியிருந்த அமிலம், அப்துல் ஹமீது மீது பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு வாந்தி- மயக்கம், உடல் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அமிலம் பட்டதன் காரணமாக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவனின் தந்தை போலீசாரிடம் புகாரளித்திருந்த நிலையில், பள்ளியில் ஆய்வு செய்த போலீசார், பள்ளி நிர்வாகத்தின் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முழுமையான விசாரணைக்கு பிறகு பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்