< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை
திருச்சி
மாநில செய்திகள்

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை

தினத்தந்தி
|
25 Jun 2023 12:47 AM IST

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் சாதனை படைத்தனர்

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் பணியாற்றும் வீரர்- வீராங்கனைகளுக்கான மாநில அளவிலான 28-வது தொழில் திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் வேலூர் சரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பாக வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், துணை வட்டார தளபதி முத்துமாலா தேவி பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் 2-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்களை நேற்று திருச்சி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுஜித்குமார் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது திருச்சி மாவட்ட வட்டார தளபதி சய்ப் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்