பெரம்பலூர்
தடகள போட்டிகளில் விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை
|தடகள போட்டிகளில் விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை படைத்தனர்.
திருச்சியில் காவிரி டெல்டா அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் கடந்த 26, 27-ந்தேதிகளில் நடந்தது. போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களில் குண்டு எறிதலில் அபிநயாவும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் விஷாலியும் முதலிடம் பிடித்து சாதனை படைத்து தங்கப்பதக்கம், சான்றிதழ் பெற்றனர். மேலும் 600 மீட்டர் ஓட்டத்தில் தேவி பிரியாவும், உயரம் தாண்டுதலில் சுவேதாவும், தன்ஷிகாவும், குண்டு எறிதலில் ரித்தன்யாவும் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம், சான்றிதழ் பெற்றனர். நீளம் தாண்டுதலில் அட்சயாவும், 14 வயதிற்கு உட்பட்ட தொடர் ஓட்டத்தில் தேவிபிரியா, தீபிகா, தன்ஷிகா ஆகியோரும், 17 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்டத்தில் அட்சயா, மது பிரியா, அசினா ஆகியோரும் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம், சான்றிதழ் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், தடகள பயிற்சியாளர் துர்கா ஆகியோர் பாராட்டினர்.