< Back
மாநில செய்திகள்
தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை
தென்காசி
மாநில செய்திகள்

தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருவேங்கடம்:

பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தட்டிச் சென்றனர். மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். மாவட்ட அளவில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற மாணவ-மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்