< Back
மாநில செய்திகள்
தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை
அரியலூர்
மாநில செய்திகள்

தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை

தினத்தந்தி
|
26 May 2023 12:30 AM IST

தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை புரிந்தார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்-உமாபிரியா. இவர்களுடைய மகன் வெங்கடேஷ் என்கிற ஆகாஷ் (வயது 22). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி காஷ்மீரில் நடைபெற்ற தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து வெங்கடேஷ் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்து உள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்