< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் சாதனை
|8 Oct 2023 1:13 AM IST
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். சுழற்சி முறையில் (லீக்) நடைபெற்ற இ்ந்த போட்டியில் 12 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஏ மற்றும் பி அணியினா் முதல் இரண்டு இடங்களை பெற்றனா். கோவை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி 3-வது இடத்தையும், ராஜபாளையம் ஸ்ரீபாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாணவா் நல இயக்குனா் சாம்சன் நேசராஜ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனா்கள் விஜயலட்சுமி, செல்வகுமார், சிதம்பரம், உதயகுமார் மற்றும் சந்திரன் செய்திருந்தனா்.