< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
17 Dec 2022 12:35 AM IST

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவர், மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் உறவினர்கள் கல்லூரிக்குள் புகுந்து சம்பந்தப்பட்ட விரிவுரையாளரின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கல்லூரி விரிவுரையாளரும், மாணவியும் பேசும் ஆடியோவும், அந்த மாணவி மற்றொரு மாணவியிடம் இதனை பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்