< Back
மாநில செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி  காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு
ஈரோடு
மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு

தினத்தந்தி
|
25 Sept 2023 2:27 AM IST

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினாா்.

பவானி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.

பொதுக்கூட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சின் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கோபு தலைமை தாங்கி, கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகனுக்கு வீரவாள் பரிசாக வழங்கினார்.

பின்னர் வேல்முருகன் பேசியதாவது:-

தட்டி பறிப்பு

ஈரோட்டில் மஞ்சள் விளைவிப்பவன் இம்மண்ணுக்கு சொந்தக்காரன். விலை நிர்ணயம் செய்பவன் வடமாநிலத்தவன். மஞ்சள் மட்டும் அல்ல தங்கம், வெள்ளி, இரும்பு, முந்திரி என அனைத்தும் விலை நிர்ணயம் செய்பவன் வடநாட்டுக்காரன் ஏற்றுமதி செய்பவன் வடநாட்டுக்காரன்.

தற்போது 27 மருத்துவக் கல்லூரிகளில் 10 ஆயிரம் மாணவர்களுக்கான வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கப் பெற்ற போதும் 5 ஆயிரம் மாணவர்களின் உரிமையை மத்திய அரசு தட்டிப் பறித்துள்ளது. இதை அண்ணாமலை கேட்பாரா? தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை, ரெயில்வே துறை வேலை வாய்ப்புகள், சுங்க சாவடி வருவாயில் 4-ல் ஒரு பகுதியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

தண்ணீர் திறக்க வேண்டும்

கர்நாடகாவில் எதிரெதிர் கருத்துக்களை கொண்ட பாரதீய ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதில் மட்டும் இரு கட்சியினரும் ஒருமித்த கருத்து உடையவர்களாக மாறி நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு கர்நாடகாவை காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்