சென்னை
தண்டையார்பேட்டையில் கோர்ட்டு உத்தரவுபடி: விநாயகர் கோவில் இடித்து அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
|மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்த ஆத்திரத்தில் 10 கார் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நேர பணியில் போலீஸ்காரர் பாலாஜி இருந்தார். அதிகாலை 4.20 மணியளவில் தியாகராயநகர் ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் போலீஸ் நிலையத்துக்கு பதற்றத்துடன் வந்தார். தனது காரின் கண்ணாடியை 2 பேர் உடைத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
உடனடியாக போலீஸ்காரர் பாலாஜி சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது குடிபோதையில் 2 வாலிபர்கள் வரிசையாக கார்களின் கண்ணாடியை உடைத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் போலீஸ்காரர் பாலாஜி மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்த ராகுல்வளவன் (வயது 22), தியாகராயநகர் உஸ்மான் சாலையை சேர்ந்த தர்மீன்ராஜ் (26) என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கிருந்து ஆத்திரத்தில் நடந்து வந்த அவர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்களின் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. 10 கார்கள் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் 3 காரின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.