< Back
மாநில செய்திகள்
தீமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் படுகாயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தீமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
11 April 2023 11:33 AM GMT

திருத்தணி அருகே தீமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது, கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் வசிப்பவர் தமிழரசன் (வயது 33). இவர் சத்திரஞ்ஜெயபுரம் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டாபிராமம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளுவரை நோக்கி வந்து கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள சுவர் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தமிழரசன், பூர்ணிமா, காரில் பயணம் செய்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), அவரது மனைவி காயத்ரி (23), உறவினர் மஞ்சுளா (50) உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்தவர்கள் திருத்தணியில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்று வீடு திரும்பும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்