< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து... இருவர் படுகாயம்- வீடு தரைமட்டம்
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து... இருவர் படுகாயம்- வீடு தரைமட்டம்

தினத்தந்தி
|
7 May 2023 8:06 PM IST

இருவர் படுகாயமடைந்த நிலையில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து சேதமடைந்துள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேத். இவருடைய வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கம்போல சுரேஷ், ராஜேந்திரன் ஆகிய இருவர் பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக பட்டாசு தயாரிக்கக்கூடிய மூலப்பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த வெடி விபத்தில் சுரேஷுக்கு சொந்தமான வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதனை தொடர்ந்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்