< Back
மாநில செய்திகள்
வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - ஒருவரின் உடல் மீட்பு
மாநில செய்திகள்

வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - ஒருவரின் உடல் மீட்பு

தினத்தந்தி
|
8 Dec 2023 6:58 AM IST

பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே சுமார் 50 அடி பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் 8 பேர் சிக்கிய நிலையில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால், 2 பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பங்க் ஊழியர் நரேஷின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஒருவர் இந்த பள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் செய்திகள்