< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

தினத்தந்தி
|
11 Aug 2023 1:45 AM IST

பட்டிவீரன்பட்டி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் சாலையின் குறுக்கே வேகத்தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையில் அந்த பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற வேன் ஒட்டுப்பட்டி பிரிவில் வந்தபோது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் திடீரென்று நிறுத்தினார். அப்போது வேனின் மீது பின்னால் வந்த 3 மினி லாரிகள் மற்றும் ஒரு கார் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்