திருநெல்வேலி
தபால்துறை மூலம் விபத்து காப்பீட்டு திட்டம்
|தபால்துறை மூலம் விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சாதாரண மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் மூலம் மிகக்குறைந்த பிரீமிய தொகையுடன் விபத்து காப்பீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போனில் விரல்ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.399-ல் மற்றும் ரூ.396-ல் பல்வேறு பலன்களை வழங்கும் இந்த குழு விபத்து காப்பீட்டு பாலிசியை பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.