< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்து - 2 பக்தர்கள் உயிரிழப்பு
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்து - 2 பக்தர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
28 Dec 2022 9:34 AM IST

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கி 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இந்நிலையில் இக்கோவிலுக்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.

அதேபோல் தான் ஏராளமான பகதர்கள் பாதயாத்திரயாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சாத்தூர் அருகே பக்தர்கள் வந்த போது பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்