< Back
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

தினத்தந்தி
|
22 May 2023 12:45 AM IST

கீழ்வேளூர் அருகே அவிறிப்பு பலகையில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

கீழ்வேளூர் அருகே அவிறிப்பு பலகையில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

விபத்து

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அகரகடம்பனூர் ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்த ரவி மகன் ஸ்ரீநாத் (வயது26). அகரகடம்பனூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செய்யது பாரக் மகன் முகமது நவாஸ் (21). இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் மாலை அகரகடம்பனூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் நாகை - திருவாரூர் சாலையில் உள்ள ஆழியூருக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை ஸ்ரீநாத் ஓட்டிக்கொண்டு செல்ல முகம்மது நவாஸ் பின்னால் அமர்ந்து இருந்தார். ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே திருக்கண்ணங்குடி செல்லும் சாலை திருப்பம் பகுதியில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நெடுஞ்சாலைத்துறை வைத்திருந்த அறிவிப்பு பலகை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீநாத் பரிதாபமாக இறந்தார். முகமது நவாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஸ்ரீநாத் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் விபத்தில் பலியானது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

===

மேலும் செய்திகள்