< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் தொண்டு நிறுவன இயக்குனர் பலி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் தொண்டு நிறுவன இயக்குனர் பலி

தினத்தந்தி
|
28 April 2023 2:07 AM IST

சாலை விபத்தில் தொண்டு நிறுவன இயக்குனர் பலியானார்.

திருச்சி அருகே உள்ள குண்டூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 57). வக்கீலான இவர் அன்பாலயம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி அதன் இயக்குனராக இருந்து வந்தார். நேற்று மதியம் செந்தில்குமார் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் எதிரில் வந்தபோது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது செந்தில்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையை கடக்க முயன்றவரும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வக்கீல் செந்தில்குமாரும் படுகாயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் செந்தில்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடையாளம் தெரியாத மற்றொரு நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்