< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
10 April 2023 1:00 AM IST

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இறையான்குடி ஊராட்சி சிங்கமங்கலம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 50). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சிங்கமங்கலத்தில் இருந்து இறையான்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த அப்பாசாமி மகன் கண்ணதாசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிங்கமங்கலம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகையன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த கண்ணதாசனுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்