தஞ்சாவூர்
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு
|மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தார்.
திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, மேல உடையார் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது58). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தஞ்சை சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மேலதிருப்பூந்துருத்தி நூர்ஜஹான் பஜார் அருகே வந்தபோது சாலையின் ஓரத்திலிருந்த கான்கிரீட் கல் மீது எதிர்பாரதவிதமாக மோதி கீழே விழுந்ததில் ரவிச்சந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் ரவிச்சந்திரன் மகன் மச்சேந்திரன் (21) புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.