திருப்பூர்
சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
|சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி பலி
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் வட மாநில கூலி தொழிலாளி பலியானார்.இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் தெரிவித்தது.ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அலி உசேன் ஜமாதார் (40) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவர் பல்லாகவுண்டம்பாளையம் மோகன் காம்பவுண்ட் பகுதியில் குடியிருந்து கொண்டு தினமும் வேலைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக அலி உசேன் ஜமாதார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.