< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கார்-மொபட் மோதல்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பலி
|26 Jan 2023 11:42 PM IST
வேடசந்தூர் அருகே கார், மொபட் மோதிய விபத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பலியானார்.
வேடசந்தூர் அருகே உள்ள மினுகம்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 70). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரி. இவர், வேடசந்தூரில் இருந்து மினுக்கம்பட்டியை நோக்கி தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். மினுக்கம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது பின்னால் வந்த கார், மொபெட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.