திருவாரூர்
ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி முதியவர் பலி
|ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி முதியவர் பலியானார்.
திருவாரூர் அருகே ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி முதியவர் பலியானார். அவருடைய மனைவி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
ஆட்டோ மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கபிலன்(வயது60). இவர் நேற்று முன்தினம் திருவாரூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். தரிசனம் முடித்து தனது மனைவி லதாவுடன் ஸ்கூட்டரில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
மயிலாடுதுறை சாலை சேந்தமங்கலம் என்ற இடத்தில் எதிரே வந்த ஆட்டோ, கபிலன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
முதியவர் பலி
இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் சொரக்குடி பகுதியை சேர்ந்த சங்கர் (30) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கபிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
காயம் அடைந்த லதா, ஆட்டோ டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.