தஞ்சாவூர்
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு
|பட்டுக்கோட்டை அருகே மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டுக்கோட்டை அருகே மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் முகிலரசன் (வயது 27). என்ஜினீயர். சென்னை அம்பத்தூரில் சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கீழக்கரம்பயம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதனால் நிலை தடுமாறி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
ஆஸ்பத்திரியில் சாவு
இந்த விபத்தில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய தந்தை முருகேசன் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.